அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு நினைவு பரிசு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகத்திற்கு, நிர்வாகிகள் நினைவு பரிசளித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 10, 11 தேதிகளில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப் பயணம் செய்தார். இதற்கான வரவேற்பு மற்றும் பிரசார ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக, மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., தலைமை தாங்கி, நிர்வாகிகளை பாராட்டி பேசினார். இதில், மாவட்ட செயலாளர் சண்முகத்திற்கு, அய்யனம்பாளையம் மாவட்ட பிரதிநிதி அருள்பாரதி, மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் சுதாகர், கிளை செயலாளர்கள் தரணிதரன், பாலச்சந்தர், ராஜ்குமார், பிரதிநிதி வேலு ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.