உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வானுார்: வானுார் அடுத்த பொம்மையார்பாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் உஷா முரளி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார். பொம்மையார்பாளையம் ஊராட்சியை சேர்ந்த ஏராளமானோர் மனு கொடுத்தனர். வானுார் பிடிஓ.,க்கள் மணிவண்ணன், சுபாஷ்சந்திரபோஸ், தாசில்தார் வித்யாதரன் முன்னிலை வகித்தனர். மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், இலவச மனை பட்டா, ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட ஏராளமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முரளி, ஊராட்சி தலைவர் ஜெகதீசன், ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமி நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை