உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தினமலர் - பட்டம் வினாடி வினா மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

தினமலர் - பட்டம் வினாடி வினா மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

விழுப்புரம்: புதுச்சேரி 'தினமலர் -பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி வினா போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறதுவிழுப்புரம் அடுத்த நன்னாடு சரஸ்வதி சென்ட்ரல் (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில் நடந்த போட்டியில் 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு மூன்று சுற்றுகளாக போட்டி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, சரஸ்வதி கல்வி குழுமம் பொருளாளர் சிதம்பரநாதன் தலைமை தாங்கினார். தாளாளர் முத்து சரவணன், முதல்வர் சுபஸ்ரீ முன்னிலை வகித்தனர்.போட்டியில் மாணவர்கள் திவேஷ், ஹரிஹரன் ஆகியோர் கொண்ட குழு முதலிடத்தை பிடித்தனர். மாணவர்கள் ரித்திஷ் பரத், நித்திஸ்வர் கொண்ட குழு இரண்டாம் இடத்தை பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை