உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தமிழ்ச்சங்க ஆண்டு விழா

தமிழ்ச்சங்க ஆண்டு விழா

செஞ்சி : செஞ்சி தமிழ்ச் சங்க ஆண்டு விழா நடந்தது.ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, சங்கத் தலைவர் கவிதாஸ் வரவேற்றார். ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கி அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கினார்.தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரிய உறுப்பினர் சிவா, சையது உஸ்மான் வாழ்த்திப் பேசினர்.பேராசிரியை எழிலரசி தலைமையில் மாணவர்களின் வெற்றிக்கு பெரிதும் துணை நிற்பவர்கள் ஆசிரியர்களா, பெற்றோர்களா தலைப்பில் பட்டி மன்றமும், ராஜா, விஜயாவின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.நிர்வாகிகள் தேவமூர்த்தி, முருகன், ஜெய்சங்கர், அம்பேத்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.பொதுச் செயலாளர் ஆல்டிரின் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை