உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாயனுார்- வேலந்தாங்கல் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

தாயனுார்- வேலந்தாங்கல் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

அவலுார்பேட்டை: தாயனுார்- வேலந்தாங்கல் ஆத்திப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணியினை செஞ்சி எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மேல்மலையனுார் அடுத்த தாயனுார் கிராமத்திலிருந்து வேலந்தாங்கல், ஆத்திப்பட்டு வழியில் 3 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி துவங்கிட பூமி பூஜை நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் லாவண்யா ராஜேஷ்குமார் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜையை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். நெடுஞ்சாலை துறை செஞ்சி உட்கோட்ட பொறியாளர் அக்பர் அலி, உதவி பொறியாளர்கள் விஷ்ணுபிரியா, பாலாஜி, மாவட்ட கவுன்சிலர் செல்விராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஜெயலட்சுமி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை