உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேன் உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது

வேன் உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது

வானுார் : ஆரோவில் அருகே சரக்கு வேன் உரிமையாளரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டைச் சேர்ந்தவர் அஜித், 23; மினி சரக்கு வேன் உரிமையாளர். இவர், நேற்று முன்தினம் இரவு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இரும்பை ரோடு சந்திப்பு அருகே தனது வேனில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் இங்கு வாகனத்தை நிறுத்தினால், எனக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 300 ரூபாயை பறித்துச் சென்றார்.இது குறித்து அஜித் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து, கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் ராஜா. 23; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ