| ADDED : பிப் 24, 2024 06:12 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கடன் பிரச்னையில் பா.ஜ., நிர்வாகியைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், சாலாமேடு தந்தை பெரியார் நகர் எம்.ஜி.ஆர்.தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 41; பா.ஜ., மாவட்ட விவசாய அணி தலைவர். இவரிடம், விழுப்புரம் பெரியார் நகரைச் சேர்ந்த சம்பத் என்பவர், கடந்த ஓராண்டுக்கு முன் 3.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.அந்த பணத்தை திருப்பித் தராததால் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 16ம் தேதி விழுப்புரம் பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன் ராமமூர்த்தி நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சம்பத் மகன் வெங்கடபிரசாத், 19; ராமமூர்த்தியிடம் சென்று, பணத்தை திருப்பிக்கேட்டு ஏன் தொந்தரவு செய்கிறாய் எனக்கேட்டு, தாக்கி, அவரது பைக்கை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார்.ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடபிரசாத்தை கைது செய்தனர்.