மேலும் செய்திகள்
கரூர் பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு அகற்றம்
24-Dec-2024
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரேவுள்ள திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இங்குள்ள பஸ்கள் நிறுத்தும் இடத்திற்கு வெளியேவுள்ள தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் சில நடைபாதையை ஆக்கிரமித்து கடைபோட்டுள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் சாலையில் நடந்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. நெடுஞ்சாலை துறை, பல முறை ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில், சிலர் மீண்டும் அதே இடத்தில் கடைகளை வைத்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
24-Dec-2024