உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியல் திருட்டு

திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பா ளையம் அய்யனார் கோவிலில் அதே கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், 48; தர்மகர்த்தவாக உள்ளார்.இவர், நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு பூஜை செய்வதற்காக கோவி லுக்குச் சென்றார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவிலில் இருந்த அம்மன் சுவாமி கழுத்தில் இருந்த அரை சவரன் தாலி மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போனது தெரியவந்தது.திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் கோவிலுக்குள் சென்று அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.இதுகுறித்து அய்யனார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சி.சி.டி.வி.,யில் பதிவான நபரைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை