நாச்சியம்மன் கோவிலில் திருட்டு
விழுப்புரம் : விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் அழகு நாச்சியம்மன் கோவிலில் நேற்று மாலை 4:00 மணிக்கு மேல் பூஜை செய்ய பூசாரி வந்தார். அப்போது, கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே அம்மன் கழுத்திலிருந்த 2 கிராம் தங்கத்தாலி திருடு போனது தெரிந்தது.மேலும், உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணமும் திருடு போயிருந்தது.புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.