மாவட்ட நுாலகத்தில் திருக்குறள் போட்டி
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட நுாலகத்தில், திருக்குறள் குறித்த பல்வேறு போட்டிகள் நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதற்கான வெள்ளி விழாவை, அரசு நுாலகத்துறை சார்பில் கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதன்படி, விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில் வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை திருக்குறள் விளக்க உரைகள், திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சி, கருத்தரங்கம் நடைபெற உள்ளது.மேலும், மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி - வினா மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்புவோர், விழுப்புரம் மாவட்ட மைய நுாலகரை வரும் 18ம் தேதிக்குள் அணுகி பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.