உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாரம்பரிய விதைத் திருவிழா

பாரம்பரிய விதைத் திருவிழா

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் தளிர் இயற்கை வழி வேளாண் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பாரம்பரிய விதைத் திருவிழா நடந்தது.விழாவிற்கு, கூட்டமைப்பு தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மணிமாறன், ஜெகதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் மகாராஜன், சாதிக்பாஷா வரவேற்றனர். சித்ரா, விஜயலட்சுமி, பொற்கொடி குத்து விளக்கேற்றினர்.தொடர்ந்து, இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துரிஞ்சல் இன மாடுகள், இயற்கை முறையிலான நவதானியங்கள், அரிசி வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கால்நடை துறை இணை இயக்குநர் பிரசன்னா, டாக்டர் அகிலன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், ஊராட்சி தலைவர் செல்வம், சக்திவேல், சிவகுமார், நாகராஜ், ராஜி, ஏழுமலை, ஆசிரியர்கள் புருஷோத்தமன், சிதம்பரநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி