உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்குவரத்து விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

போக்குவரத்து விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

விழுப்புரம்: விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் இருந்து, சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி துவங்கியது. வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். இதில், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ். மேற்பார்வையில், 50க்கும் மேற்பட்டோர் ெஹல்மெட் அணிந்து, விழுப்புரம் பழைய பஸ்நிலையம் வரை பேரணியாக சென்றனர்.அப்போது, மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனங்களின் சார்பில், சாலை போக்குவரத்து விதிமுறைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி