உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழம், காய்கறிகள் மூலம் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்

பழம், காய்கறிகள் மூலம் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்

மயிலம் : மயிலத்தில் வேளாண்மைத் துறை சார்பில் கிராமங்களில் விளையும் பழம், காய்கறிகளில் இருந்து மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சிவக்குமார், வேளாண்மைக் கல்லுாரி முதல்வர் ஜவஹர்லால் பேராசிரி யர்கள் ராவணசந்தர், நவின்குமார் முன்னிலை வகித்தனர். மாணவி பிரித்தா வரவேற்றார்.தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியை ஷீலா கிராமங்களில் விளையும் தக்காளி உள்ளிட்ட பழங்கள், காய்கறிகள் மூலம் மதிப்பு கூட்டு பொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.ஊராட்சி செயலாளர் சங்கர், வேளாண்மைக் கல்லுாரி மாணவிகள் அமலா, சாருமதி துவக்க உரையாற்றினர். மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன், முதல்வர் திருநாவுக்கரசு வாழ்த்திப் பேசினர்.மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்து கிராம விவசாயிகளின் கேள்விகளுக்கு வேளாண்மை கல்லுாரி மாணவிகள் சரிகா, ஆருத்ரா, சவுந்தர்யா, சபர்மதி, காயத்ரிதேவி, பவித்ரா, நவநீதா பதில் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்