உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருநங்கையாக மாறிய நபர் தற்கொலை

திருநங்கையாக மாறிய நபர் தற்கொலை

கோட்டகுப்பம்: திருநங்கையாக மாறிய நபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தாலுகா பிரம்மதேசம் அடுத்த அறியாதாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அசோக் குமார், 47; இவருக்கு திருமணம் ஆகி சுகந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருநங்கையாக மாறிய அசோக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குடும்பத்தைப் பிரிந்து சென்னையில் தங்கிருந்து இருந்த அசோக் குமார், கடந்த 5 ஆண்டுகளாக கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடி மதுவிலக்கு சோதனை சாவடி எதிரே குடியிருந்து வந்தார். மதுப்பழக்கம் உள்ள இவர் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ