உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காரில் மதுபானம் கடத்திய இருவர் கைது

காரில் மதுபானம் கடத்திய இருவர் கைது

மரக்காணம்: புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மதுபானம் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.மரக்காணம் அடுத்த அனுமந்தை பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 750 எம்.எல்., 14 மதுபாட்டில், 180 எம்.எல்., 90 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சென்னை வண்டலுாரை சேர்ந்த ராஜா மகன் அரவிந்தசாமி,31; முருகன் மகன் கண்ணதாசன்,27; என்பதும், மேலும் இவர்கள் புத்தாண்டு கொண்டாட மதுபானம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை