உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேற்று சாலாமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேட்டப்பூர் ஏரிக்கரை அருகே ஆனாங்கூர் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் கோகுல், 21; ராமானுஜபுரம் பகுதியைச் சேர்ந்த தனஞ்செழியன் மகன் விஜய், 25; ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த சீட்டு கட்டு மற்றும் பணம் ரூ.500யை பறிமுதல் செய்தனர். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை