உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் ரூ.10.50 லட்சத்திற்கு ஏலம்

மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் ரூ.10.50 லட்சத்திற்கு ஏலம்

விழுப்புரம்: விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில், மாவட்டத்தில் பல்வேறு மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., தினகரன், டி.எஸ்.பி.,க்கள் கந்தசாமி, ஞானவேல் முன்னிலை வகித்தார். இதில், 17 நான்கு சக்கர வாகனங்களும், 2 மூன்று சக்கர வாகனமும், 85 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 104 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. 11 நான்கு சக்கர வாகனங்களும், 1 மூன்று சக்கர வாகனமும், 43 இருசக்கர வாகனம் என மொத்தம் 55 வாகனம் பொதுமக்களால் ஏலத்தில் எடுக்கப்பட்டன. ஏலத்தொகையாக 8 லட்சத்து 90 ஆயிரத்து 400 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., ௧ லட்சத்து 60 ஆயித்து 252 ரூபாய் என மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரத்து 672 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை