உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

விழுப்புரம்:

சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு ரயில்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. வரும் 11, 12ம் தேதிகளில் காலை 9:25 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் ( வண்டி எண் 06130) புறப்பட்டு, காலை 11:10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது. அதேபோல், மறுமார்க்கத்தில் இரு நாட்களும், திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பகல் 12:40 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) மதியம் 2:15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இரவு 9:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06131) இரவு 10:45 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடைகிறது.மறுமார்க்கத்தில் 12, 13ம் தேதிகளில் அதிகாலை 3:30 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06132) அதிகாலை 5:00 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்துார், திருக்கோவிலுார், ஆதிச்சனுார், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு ரயில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை