உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மண்டல அளவில் கபடி போட்டி விழுப்புரம் கல்லுாரி சாதனை

மண்டல அளவில் கபடி போட்டி விழுப்புரம் கல்லுாரி சாதனை

விழுப்புரம் : விழுப்புரம் மண்டல அளவிலான ஆண்கள் கபடி போட்டியில், அரசு கல்லுாரி மாணவர்கள் வென்று சாதனை படைத்தனர்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் விழுப்புரம் மண்டல அளவில் ஆண்களுக்கான கபடி போட்டி கடந்த 18 ம் தேதி நடைபெற்றது. விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் நடந்த போட்டியை, அண்ணா அரசு கல்லுாரி ஆண்களுக்கான கபடி போட்டியை எடுத்து நடத்தியது. போட்டியின் துவக்க விழாவிற்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். மாவட்ட அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒருங்கிணைப்பாளர் வாலிபால் மணி, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் பங்கேற்றனர். விழுப்புரம் மண்டல அளவில் உள்ள 16 கல்லுாரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.இறுதி போட்டியில், கள்ளக்குறிச்சி அணியை எதிர்கொண்டனர். இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி மாணவர்கள் 35-15 புள்ளிகளில் வென்று சாதித்து, கோப்பை மற்றும் பதக்கங்களை பெற்றனர். அவர்களை கல்லுாரி முதல்வர் சிவக்குமார், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி