உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழுப்புரம் மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளின் ரூ.409.34 கோடிக்கு விளைபொருட்கள் கொள்முதல்

 விழுப்புரம் மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளின் ரூ.409.34 கோடிக்கு விளைபொருட்கள் கொள்முதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மார்க்கெட் கமிட்டிகள் மூலம், கடந்த 8 மாதங்களில், 409.34 கோடி ரூபாய் மதிப்பிலான விளைபொருட்கள் கொள் முதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம், அரகண்டநல்லுார், செஞ்சி, திருவெண்ணெய்நல்லுார், விக்கிரவாண்டி, அவலுார்பேட்டை, வளத்தி மற்றும் மரக்காணம் ஆகிய மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன . இந்த கமிட்டிகள் மூலம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரையில் நெல், உளுந்து, வேர்க்கடலை, எள், கம்பு, பனிப்பயறு, பருத்தி, மக்காசோளம் மற்றும் பச்சைபயறு உள்ளிட்ட 14 ஆயிரத்து 460 டன் விளைபொருட்கள் கொள் முதல் செய்யப்பட்டது. கடந்த 8 மாதங்களில், விழுப்புரம் கமிட்டியில் 14 ஆயிரத்து 372 விவசாயிகள், திண்டிவனம் கமிட்டியில் 9,513 விவசாயி களும், செஞ்சி கமிட்டியில் 35 ஆயிரத்து 882 விவசாயிகளும், அரகண்டநல்லுார் கமிட்டியில் 54 ஆயிரத்து 691 விவசாயிகளும், அவலுார்பேட்டை கமிட்டியில் 26 ஆயிரத்து 299 விவசாயிகளும், விக்கிரவாண்டி கமிட்டியில் 22 ஆயிரத்து விவசாயிகளும், திருவெண்ணெய்நல்லுார் கமிட்டியில் ஆயிரத்து 489 விவசாயிகளும், வளத்தி கமிட்டியில் 188 விவசாயிகளும். மரக்காணம் கமிட்டியில் 22 விவசாயிகளும், விளைபொருட்களை விற்று பயனடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 மார்க்கெட் கமிட்டிகள் மூலம் மொத்தம் 409 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 460 டன் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 16 ஆயிரத்து 463 விவசாயிகள் பயனடைந் துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ