உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வு விருது

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வு விருது

கள்ளக்குறிச்சி : பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வழங்கும் விழா நடந்தது.கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு ஏ.இ.ஓ., கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஏ.இ. ஓ.,க்கள் ஜெயபால், அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 51 பேருக்கு சான்றிதழ் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் காசோலையை அழகுவேல்பாபு எம்.எல்.ஏ., வழங்கினார்.வளமைய மேற்பார்வையாளர் பாண்டியன், தலைமை ஆசிரியர்கள் சூரியகலா, கபிலன், மோகன், சவுந்தரராஜன், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் குபேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி