உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் : முஸ்லிம் மக்கள் கழகம் வலியுறுத்தல்

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் : முஸ்லிம் மக்கள் கழகம் வலியுறுத்தல்

திண்டிவனம் : ஐகோர்ட் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு தமிழக அரசு உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென முஸ்லிம் மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து முஸ்லிம் மக்கள் கழக நிறுவன தலை வர் ஜைனுதீன் விடுத்துள்ள அறிக்கை:தி.மு.க., அரசால் கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக முதல்வர் ஜெ.,முடக்க நினைக்கிறார். சென்னை ஐகோர்ட் கடந்த 22ம் தேதி சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை வழங்க உத்தரவிட்டும் அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.சமச்சீர் கல்வியை உடன் அமல்படுத்த வேண் டும். புத்தகங்களை உடன் வழங்க கோரி இன்று 29ம் தேதி மாணவர்கள் சார்பில் ஒரு நாள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் நடத்தப் போவதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை முஸ்லிம் மக்கள் கழகம் வரவேற்று ஆதரவு தெரிவிக்கிறது.ஐகோர்ட் தீர்ப்பிற்கு கட் டுப்பட்டு, சமச்சீர் கல்வியை அமல்படுத்தி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை