உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்கசிவால் 5 வீடுகள் சாம்பல் பணம், நகைகள் எரிந்து சேதம்

மின்கசிவால் 5 வீடுகள் சாம்பல் பணம், நகைகள் எரிந்து சேதம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் சாம்பலானது. இதில் பணம், நகைகள் எரிந்து சேதமடைந்தன.விழுப்புரம் அடுத்த கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி, 47; விவசாய கூலி தொழிலாளி. இவரது வீட்டின் மேற்புரம் செல்லும் மின்கம்பியில் திடீரென நேற்று காலை 11.15 மணிக்கு மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்தது. அருகிலிருந்த சுந்தரமூர்த்தி, பழனிசாமி, ரங்கசாமி, வீரமணி ஆகியோரது வீடுகளில் தீ பரவியது.விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்துதனர்.இந்த விபத்தில் கலியமூர்த்தி வீட்டில் வைத்திருந்த இரண்டரை லட்சம் ரூபாய் நோட்டுகள், 8 சவரன் தங்க நகைகள் எரிந்து சேதமடைந்தன. சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டிலிருந்த ஒன்றரை சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தீயில் கருகியது. அதே போல் ரங்கசாமி வீட்டில் வைத்திருந்த 10 மூட்டை நெல், பழனிசாமி வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணமும் எரிந்து சாம்பலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்