உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பார்சல் லாரியில் கடத்திய ரூ. 4 லட்சம் எரிசாராயம் பறிமுதல்

பார்சல் லாரியில் கடத்திய ரூ. 4 லட்சம் எரிசாராயம் பறிமுதல்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே லாரியின் ரகசிய அறையில் வைத்து கடத்தப்பட்ட நான்கு லட்சம் மதிப்புள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மரக்காணம் ரோட்டில் நேற்று மாலை மதுவிலக்கு டி.எஸ்.பி., ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் அப்பாசாமி , சப்-இன்ஸ்பெக்டர் ரகு உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்@பாது அவ்வழியாக வந்த பார்சல் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.லாரி காலியாக இருந்தது. டிரைவர் சீட்டுக்கு பின்னால் இருந்த ரகசிய அறையில் 35 லிட்டர் அளவுள்ள 84 கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு நான்கு லட்சமாகும்.இதையடுத்து சாராயம் மற்றும் லாரியை பறிமுதல் செ#து, டிரைவர் வீரமூரை @சர்ந்த முருகனை கைது செ#து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்