உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழாயடி தகராறு: 15 பேர் மீது வழக்கு

குழாயடி தகராறு: 15 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர் : தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திருக்கோவிலூர் அடுத்த கோட்டமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா, 28. இவரது மனைவி பொது குழாயில் தண்ணீர் பிடித்தபோது, ஆறுமுகம் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் லட்சுமணன், கோபி, கார்த்தி மற்றும் அன்னபூரணி, 56 உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர்.மணலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, குறள் அரசன், கோவிந்தராஜ், துரை மூவரையும் கைது செய்தனர். மேலும் 12 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி