உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வகுப்புகள் துவக்க விழா

வகுப்புகள் துவக்க விழா

செஞ்சி : செஞ்சி ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.கல்லூரி செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். கல்லூரி சேர்மன் வழக்கறிஞர் பூபதி குத்துவிளக்கேற்றி, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு முன்னனி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும், சிறந்த மாண வர்களுக்கு கல்லூரி நிர்வாகம் மூலம் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்றார். கல்லூரி முதல்வர் மணிகண்டன் பேராசிரியர்களை அறிமுகம் செய்து பேசினார். பேராசிரியை வசுமதி தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் முருகதாஸ், தட்சிணாமூர்த்தி, அருள்குமார், சிவநேசன், அருள் முருகன், வெங்கடேசன் கலந்து கொண்டனர். பி.ஆர்.ஓ., ஜெயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை