உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்பட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கல்பட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம்

விழுப்புரம் : கல்பட்டு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் 21 அடி உயரத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஸ்வயம்பிரகாஸ அவதூத ஆஸ்ரமம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்