உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழகம் சென்னைக்கு 1,122 சிறப்பு பஸ்கள் இயக்கம்

விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழகம் சென்னைக்கு 1,122 சிறப்பு பஸ்கள் இயக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி, வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு 1,122 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் செய்திக்குறிப்பு:வார இறுதி நாட்களான வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் 21ம் தேதி சுபமுகூர்த்த நாளாக உள்ளது. அன்றைய தினங்களில் விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலுார், காஞ்சிபுரம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலிருந்து, பொதுமக்கள் அதிகளவில் சென்னைக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில், வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், ஜன. 20ம் தேதி கூடுதலாக 684 சிறப்பு பஸ்களும், ஜன 21ம் தேதி 438 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,122 சிறப்பு பஸ்கள், மேற்கண்ட வழித்தடங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட உள்ளன.அதனால், பயணிகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக இணையதளத்தில் முன்பதிவு செய்து, சிறப்பு பஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்க அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி