உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமி பாலியல் பலாத்காரம்: பள்ளி தாளாளர் மகனுக்கு வலை

சிறுமி பாலியல் பலாத்காரம்: பள்ளி தாளாளர் மகனுக்கு வலை

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி தாளாளரின் மகன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏனாதிமங்கலத்தில் தனியார் கான்வென்ட் உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பள்ளி தாளாளரின் மகன் வினோத்,21 கிராமங்களிலிருந்து வேனில் பள்ளிக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை 8 மணிக்கு சேத்தூர் கிராமத்திற்கு வேனை ஓட்டிச் சென்றபோது இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி தீபிகா,7 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வினோத்தை பார்த்தவுடன் வேனில் ஏற மறுத்து அழுதார். அங்கிருந்து நைசாக நழுவிய வினோத் வேனுடன் பள்ளிக்கு சென்றுவிட்டார். மற்றொரு கிராமத்திற்கு வேனை ஓட்டிச்செல்லாமல் பள்ளியில் நிறுத்திவிட்டு வினோத் தலைமறைவானார். பள்ளியில் நிற்கும் வேனை பார்த்த அவரது தம்பி சரத்குமார்,19 வேறொரு கிராமத்திற்கு குழந்தைகளை அழைத்து வருவதற்கு வேனை ஓட்டிச்சென்றார். இதற்கிடையில் வேனில் ஏற மறுத்த சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்ததில் கடந்த 24ம் தேதி மாலை பள்ளியின் மாடிக்கு அழைத்து சென்று வினோத் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் செல்போனில் தெளி கிராமத்திற்கு தொடர்பு கொண்டு சிலரிடம் பள்ளி வேனை மடக்கி பிடிக்குமாறு கூறினர். இதையடுத்து தெளி கிராம மக்கள் பள்ளி வேனை ஓட்டிச்சென்ற சரத்குமாரை மடக்கி பிடித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசாரிடம் சிறுமி நடந்ததை கூறினார். இதையடுத்து போலீசார் பள்ளி தாளாளர் தனலட்சுமி, சரத்குமாரிடம் விசாரித்து, தலைமறைவான வினோத்தை விசாரணைக்கு அழைத்து வருமாறு கூறினர். இச்சம்பவம் பரவியதால், பள்ளியில் படிக்கும் பிற குழந்தைகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி