உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வரதராஜ பெருமாள் கோவிலில் கா தேசிகர் சுவாமி மகோற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் கா தேசிகர் சுவாமி மகோற்சவம்

விழுப்புரம் : பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில் மகா தேசிகர் சுவாமிக்கு மகோற்சவம் துவங்கியது. விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள வேங்கட வரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ஆதிவன் சடகோப யதீந்தர மகா தேசிகர் சுவாமிக்கு மகோற்சவம் நடக்கிறது. இதனையொட்டி கடந்த 23ம் தேதி முதல் தினந்தோறும் காலை 8 மணிக்கும், மாலை 6 மணிக்கும் வேங்கடவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், ஆதிவன் சடகோப யதீந்தர மகா தேசிகர் சுவாமிக்கு தீபாராதனையும் நடந்து வருகிறது.தொடர்ந்து வரும் 2ம் தேதி காலை 6.30 மணிக்கு வேங்கட வரதராஜ பெருமாளுக்கு விஸ்வரூப அலங்காரமும், மகா திருமஞ்சனமும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு சாற்றுமுறை, இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வேங்கட வரதராஜ பெருமாள் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 6ம் தேதி காலை 9 மணிக்கு தேசிகர் மங்களா சாசனம், சாற்றுமறையும், மாலை 5 மணிக்கு பெருமாள் ஸ்ரீ வேங்கடவரதன் வீதியுலா புறப்பாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பட்டாச்சாரியர்கள் ஸ்ரீதர், வரதன் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ