உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் வள்ளலார் தருமசாலை நலத்திட்டம்

விழுப்புரம் வள்ளலார் தருமசாலை நலத்திட்டம்

விழுப்புரம் : தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவை யொட்டி, விழுப்புரத்தில் வள்ளலார் சத்திய தருமச்சாலை சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நகை மதிப்பீட்டாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தினேஷ், அஜித்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் சேர்மன் ஜனகராஜ், ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். இதில், வள்ளலார் சத்திய தருமச்சாலை நிர்வாகிகள் பலராமன், ராமலிங்கம், பாரதி, சரவணபவன், வேல்முருகன், வழக்கறிஞர் சங்கர், பிரேம்ராஜன், வெங்கடேசன், வாசுதேவன், ஜெயக்குமார், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அண்ணாமலை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ