உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோணை மதுரா வடகால் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கோணை மதுரா வடகால் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

செஞ்சி : செஞ்சி தாலுகா கோணை மதுரா வடகால் கிராமத்தில் செல்வ விநாயகர், முத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 10ம் தேதி மாலை 4 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, திரவிய ஹோமம், மகா சத்தி ஹோமம் செய்தனர். காலை 8 மணிக்கு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், 8.10 க்கு முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை யும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இரவு மகா தீபாராதனை, வாணவேடிக்கை, சாமி வீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை