உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்தில் வண்டி மாடு பலி

விபத்தில் வண்டி மாடு பலி

செஞ்சி : அரசு பஸ் மோதியதில் வண்டி மாடு இறந்தது. செஞ்சி தாலுகா செ.குளப்பாக்கத்தை சேர்ந்த சின்னப்பன் மகன் பெரியநாயகம், 56; விவசாயி. இவர் கடந்த 8ம் தேதி இரவு 8 மணிக்கு அப்பம்பட்டில் இருந்து மட்டப்பாறைக்கு மாட்டு வண்டி ஓட்டி சென்றார். அப்போது வேலூரில் இருந்து விழுப்புரம் சென்ற அரசு பஸ் மாட்டு வண்டியின் பின்பக்கம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெரியநாயகம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்தில் மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே இறந்தது. மற்றொரு மாடு படுகாயம் அடைந்தது.விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ