உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை மறியல் செய்த 40 பேர் மீது வழக்கு

சாலை மறியல் செய்த 40 பேர் மீது வழக்கு

திண்டிவனம் : சாலை மறியல் செய்த 40 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். திண்டிவனம் நேதாஜி நகரை சேர்ந்த சிவக்குமார் மனைவி கல்பனா, 37. இவர் கடந்த 9ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள மின்சார அலுவலகம் அருகே சாலையை கடந்தபோது திண்டிவனம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். விபத்து குறித்து தகவலறிந்த நேதாஜி நகர், விவேகானந்தா நகரை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியதாக வி.ஏ.ஓ., சேகர் கொடுத்த புகாரின் பேரில் விரிவுரையாளர் சவரிமுத்து, வழக்கறிஞர்கள் சாண்டில்யன், திலீபன் உட்பட 40 பேர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை