| ADDED : ஆக 11, 2011 11:10 PM
விழுப்புரம் : விவசாயிகளுக்கு குறுகிய கால கடனாக 7 சதவிகித வட்டியில் ரூபாய் 3 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப் படுவதாக இந்தியன் வங்கி மண்டல பொதுமேலாளர் உலகன் தெரிவித்தார். இந்தியன் வங்கி சார்பில் விக்கிர வாண்டி, பெரியதச்சூர், ராதாபுரம் பகுதி விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப் பட்டது. இதன்படி பழத்தோட்டம் அமைத் தல், எண்ணெய் வித்து பயிர் கடன், நெல் சாகுபடி, மண்புழு உரம் தயாரித்தல், பட் டுப்புழு வளர்த்தல், கரும்பு சாகுபடி கடன் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு வளர்ச்சி கடன் உள்ளிட்ட 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங் கும் விழா விக்கிரவாண்டியில் நடந்தது. விழுப்புரம் முன்னோடி வங்கி மேலா ளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல அலுவலக சீனியர் மேலாளர் (விவசாயம்) மனோகரன் முன்னிலை வகித்தார். விக்கிரவாண்டி கிளை மேலாளர் குமார் வரவேற்றார். விழாவில் முன்னோடி விவசாயி குமாரசாமி, ராதாபுரம் விவசாயிகள் குழு தலைவர் செல்வகணபதி, வங்கி மேலாளர்கள் ராஜேந்திரன், நரசிம்மன், கிராம வளர்ச்சி அலுவலர் சுகுணா, அலுவலக உதவியாளர் அரிகோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மண்டல பொதுமேலாளர் உலகன் கடனுதவி களை வழங்கி பேசியதாவது : விவசாயிகளின் வளர்ச்சிக்கு இந்தியன் வங்கி பல்வேறு வகைகளில் உறுதுணை யாக உள்ளது. விவசாயிகளுக்கு குறுகிய கால கடனாக 7 சதவிகித வட்டியில் ரூபாய் 3 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. வாடிக்கை யாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்தையே விவசா யிகளுக்கு கடனாக வழங்குகிறோம். கடன் பெறும் விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் உரிய காலத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தினால் தான் டெ பாசிட்தாரர்கள் கேட்கும் போது பணம் திருப்பி தர முடியும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் போது வட்டிச் சுமை குறைந்து, வங்கியில் நல்ல பெயரையும் ஏற்படுத்தும். இந்தியன் வங்கி தொடர்ந்து விவசாயிகளின் நலன் கருதி செயல்படும்.