உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தே.மு.தி.க., பிரமுகர் உட்பட இரண்டு பேர் விபத்தில் பலி

தே.மு.தி.க., பிரமுகர் உட்பட இரண்டு பேர் விபத்தில் பலி

அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை அருகே மொபட் மீது பஸ் மோதியதில் தே.மு.தி.க., பிரமுகர் உட்பட இரண்டு பேர் இறந்தார். செஞ்சி தாலுகா கீரந்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் உலவன், 55. இவர் மேல்மலையனூர் ஒன்றிய தே.மு.தி.க., கலை இலக்கிய அணி துணை செயலாளராக இருந்தார். கீரந்தப்பட்டில் மளிகை கடை நடத்தி வந்த இவர் நேற்று முன்தினம் மாலை மொபட்டில் அவலூர்பேட்டைக்கு வந்தார். இவருடன் கப்ளாம்பாடியை சேர்ந்த சின்னாப்பு மகன் செல்வம், 32 என்பவரும் வந்தார். அவலூர்பேட்டை அருகே எதிரே வந்த தனியார் பஸ் மொபட் மீது மோதியது. பலத்த காயமடைந்த உலவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த செல்வம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து பஸ் டிரைவர் சிவசக்தி, 27 என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி