உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கமிட்டி வியாபாரிகள் "சிண்டிகேட் விவசாயிகள் கடும் அதிருப்தி

கமிட்டி வியாபாரிகள் "சிண்டிகேட் விவசாயிகள் கடும் அதிருப்தி

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் 'சிண்டிகேட்' விலையை ஏற்க விவசாயிகள் மறுத்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று 3,000 நெல் மூட்டைகள், மணிலா-40, எள்-4, கம்பு-30, மக்காசோளம்- 150, உளுந்து- 4 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. நெல் ரகங்களில் டீலக்ஸ் 626 ரூபாய், பொன்னி 700, ஏ.எஸ்.டி.16 ரகம் 600, ஏ.டி.டி.-39 ரகம் 610, டி.கே.என்.-9 ரகம் 553, ஏ.டி.டி.-37 ரகம் 600 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. மணிலா ஒரு மூட்டை 4,019 ரூபாய், மக்காசோளம் ஆயிரத்து 160, உளுந்து 4031 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை குறைவாக நிர்ணயித்ததாக கூறி விவசாயிகள் தரப்பில் கமிட்டி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் பட்டாபிராமன், டோமினிக் விரைந்து சென்று விவசாயிகளை சமாதானம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை