உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேவபாண்டலம் பள்ளியில் மரக் கன்றுகள் நடும் விழா

தேவபாண்டலம் பள்ளியில் மரக் கன்றுகள் நடும் விழா

சங்கராபுரம்:தேவபாண்டலம் கோவில் அரிமா சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தேவபாண்டலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் தெய்வீகன் தலைமை தாங்கினார். மண்டல தலை வர் தங்கராஜ், மாவட்ட தலைவர்கள் வேலு, கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஸ்ரீராமன் வரவேற்றார். மாவட்ட தலைவர் வெங்கடசுப்பன் மரக் கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.சங்கராபுரம் ரோட்டரி தலைவர் வெங்கடேசன், முத்துகருப்பன், வைத்திலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் கலாநிதி, ஆசிரியர்கள் வெங்கடேசன், ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்ரமணியன், அண்ணாமலை, சின்னசாமி, பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை