உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்விரோத தகராறு ஒருவர் கைது

முன்விரோத தகராறு ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் ஆராவமுதன், 50. அதே ஊரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி, 49. நிலம் சம்மந்தமாக இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 22ம் தேதி இரவு சித்ரா மகாலில் ஊர் மற்றும் காலனி மக்கள் கூடி உள்ளாட்சி தேர்தலில் தாமோதிரனை நீலமங்கலம் ஊராட்சி தலைவராக தேர்வு செய்தனர். கலியமூர்த்தியின் தம்பி பொன்னுசாமியை தேர்வு செய்யாததற்கு ஆராவமுதன் காரணம் என்று கருதி அவரை ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து கலியமூர்த்தியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Iyer
ஆக 07, 2025 22:04

1.5 கோடி பங்களாதேசிகள் + ரோஹிங்யாக்கள் - மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் சட்டவிரோதமாக சேர்க்கப்பற்றுள்ளனர். அந்த 1.5 கோடியை அடித்துவிட்டால் - மேற்கு வங்கத்தில் மம்தா 100 சீட்டுக்கு மேல் பெறமுடியாது இனி W.B. ல் எப்போதும் பிஜேபி ஆட்சிதான்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி