உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாராந்திர குறைதீர் நாள் முகாம்

வாராந்திர குறைதீர் நாள் முகாம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த வாராந்திர சிறப்பு குறைதீர் நாள் விசாரணை முகாமில் 159 மனுக்கள் பெறப்பட்டது.விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் வாராந்திர சிறப்பு குறைதீர் நாள் விசாரணை முகாம் நேற்று நடந்தது. விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த முகாமில் கூடுதல் எஸ்.பி., ஸ்ரீதரன், பொது மக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டார். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் ஆகிய 4 உட்கோட்டங்களில் அந்தந்த டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.முகாமில் 159 புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 105 புகார் மனுக்களின் மீது உடனடி விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 54 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை