விழுப்புரம்: விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சேர்ந்தனுார், ஏ.கே.குச்சிப்பாளையம், நரசிங்கபுரம், சின்னகள்ளிபட்டு, காவணிப்பாக்கம் கிராம இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஆனாங்கூர் பகுதி குழுக்களுக்கு மேளம், தப்பட்டை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், அவைத் தலைவர் கண்ணப்பன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், முன்னாள் ஊராட்சி தலைவர் மணி, ஒன்றிய துணைச் செயலாளர் ஞானவேல், கவுன்சிலர்கள் மணவாளன், மணி, கலை இலக்கிய அணி காமராஜ், முருகன், ரவிந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.