உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நலத்திட்ட உதவி அ.தி.மு.க., வழங்கல்

 நலத்திட்ட உதவி அ.தி.மு.க., வழங்கல்

விழுப்புரம்: முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாளையொட்டி, கண்டமங்கலம் ஒன்றியம் சின்னகுப்பம், காந்தி நகரில் உள்ள அங்கன்வாடி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாளையொட்டி, கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் சின்னகுப்பம், காந்தி நகர் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் புத்தாடைகளை வழங்கினார். மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் கோபி (எ) வேல்முருகன், விவசாய அணி செயலாளர் குமரேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சேதுபதி, இலக்கிய அணி துணை தலைவர் சிவக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை