உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சாலையோர செடிகள் அகற்றப்படுமா?

 சாலையோர செடிகள் அகற்றப்படுமா?

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் -திருக்கோவிலுார் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இரு பக்கங்களிலும் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டாச்சிபுரத்திலிருந்து சித்தாத்துார், ஆலம்பாடி வழியாக திருக்கோவிலுார் செல்லும் சாலையில் புதர் மண்டியுள்ளது. சாலையின் 2 பக்கஙகளிலும் செடிகளும் படர்ந்துள்ளது. இதனால், எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. மேலும், கனரக வாகனங்கள் வந்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை விட்டு கீழே இறங்கி ஒதுங்கி வழிவிட முடியாத நிலை உள்ளது. ஒரு சில இடங்களில் வடகிழக்குப் பருவமழைக்காக சாலையின் இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் வடிய கால்வாய் வெட்டப்பட்டிருப்பதாலும் செடிகள் இருப்பது தெரியவில்லை. எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ