உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்ற பெண் கைது

விழுப்புரம்: பங்க் கடையில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். காணை சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அகரம் சித்தாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மனைவி ஜெயா, 55; என்பவர், அவரது பங்க் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. காணை போலீசார் வழக்குப்பதிந்து ஜெயாவை கைது செய்தனர். குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !