உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை

விழுப்புரம் : வரதட்சணை கேட்டு பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா மேலநத்தத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் லிதியால், 27; என்பவரும், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 34; என்பவரும், காதலித்து, 2016ல் திருமணம் செய்துகொண்டு, விநாயகபுரத்தில் வசித்து வந்தனர்.திருமணமான சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு, மாமியார் இந்திராணி,68; கணவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.இதனால், நகை, பைக் மற்றும் பொருள்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். மேலும், வரதட்சணையாக ரூ.50 ஆயிரம் கேட்டு கொடுமைப்படுத்தியதால், லிதியால், கடந்த 16.12.2018ல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து, அவலூர்பேட்டை போலீசார் ஜெயப்பிரகாஷ், இந்திராணி மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட ஜெயப்பிரகாஷ், இந்திராணி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இருவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை