உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு

குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே கணவன், மனைவிக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தீக்குளித்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் மதுரா மண்டபம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ், 32; கொத்தனார். இவரது மனைவி சத்யா, 30; கட்டட கூலித் தொழிலாளி. இருவரும் ஊட்டியில் கட்டட வேலை செய்து வந்தனர்.சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சத்யா வீட்டில் வைத்திருந்த தின்னரை உடலில் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவர், சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ