உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் அழகிரி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சுந்தரி வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் முருகன், பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் குற்ற நடவடிக்கை தடுப்பது; குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது; குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது; பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது; மற்றும் போக்சோ சட்டம்; ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மேந்திரன், சமூகப் பணியாளர் திவ்யா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை