மேலும் செய்திகள்
உலக மரபு வாரவிழா
23-Nov-2024
நவ.25 வரை இலவச அனுமதி
20-Nov-2024
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகாவில் உலக மரபு வார விழாவை கொண்டாட்டம் நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த உடையாநத்தம், பனமலைபேட்டை பகுதியில், விழுப்புரம் யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் சார்பில் நடந்த உலக மரபு வார விழாவிற்கு சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் தனராஜ், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி மனோஜ்குமாரா வரவேற்றார்.விழுப்புரம் மாவட்டத்தின் மரபுச் சின்னங்களான கீழ்வாலைப் பாறை ஓவியங்கள், உடையாநத்தம், விசிறிப்பாறை, பனைமலை தாளகிரீஸ்வரர் கோவில், தளவானுார், மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்கள் ஆகிய இடங்களை குழுவினர் பார்வையிட்டனர்.வரலாற்று சிறப்புகள் குறித்தும், மரபு சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொது மக்களிடம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் பேசினார்.சங்க இணை ஒருங்கிணைப்பாளர் சுந்தரவேல் நன்றி கூறினார்.
23-Nov-2024
20-Nov-2024