உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  லாட்டரி விற்ற வாலிபர் கைது

 லாட்டரி விற்ற வாலிபர் கைது

விழுப்புரம்: மூன்று நம்பர் லாட்டரி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் முழுதும் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில், வி.மருதுாரில் லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், வி.மருதுாரில் ரோந்து சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ், 35; என்பவர், அரசால் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பது தெரியவந்தது. போலீசார் ஆனந்தராஜை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை